என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நடிகர் செந்தில்
நீங்கள் தேடியது "நடிகர் செந்தில்"
பிரசாரத்தில் விதி மீறலில் ஈடுபட்டதாக நடிகர் செந்தில் மற்றும் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RavindranathKumar #ActorSenthil
போடி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம் செய்தார். போடி டவுன் பகுதியில் அவருக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் போடி டி.வி.கே.கே. பிரதான சாலையில் தனது பிரசார வாகனத்தை நிறுத்தி விட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். எனவே சில நிமிடங்கள் மட்டும் பேசிய செந்தில் பின்னர் பிரசார வாகனத்தில் வாக்கு கேட்டபடி சென்று விட்டார்.
தேர்தல் பறக்கும்படை அலுவலர் உதயகுமார் இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடிகர் செந்தில் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் போடி வாரச்சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. கரை பதித்த வேட்டிகளை வழங்குவதாக தேர்தல் பறக்கும்படை அலுவலர் சிவபிரபுவிற்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். #RavindranathKumar #ActorSenthil

நடிகர் செந்தில் உறவினரிடம் பட்டப்பகலில் 300 பவுன் நகையை வழிப்பறி செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். #JewelRobbery
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் குருவலிங்கம். அவருடைய மனைவி உமா (வயது 43). இவர்கள் நகைச்சுவை நடிகர் செந்திலின் நெருங்கிய உறவினர்கள். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கமுதி கிளையில் சுமார் 300 பவுன் நகையை உமா லாக்கரில் வைத்திருந்தார்.
வருகிற 30-ந்தேதி அருப்புக்கோட்டையில் நடைபெறும் விழாவில் அணிவதற்காக, லாக்கரில் வைத்த நகைகளை வங்கியில் இருந்து நேற்று மதியம் அவர் எடுத்துச்சென்றார்.
அப்போது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், உமாவின் அருகில் சென்று தெரிந்தவர்கள்போல் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவர்கள் நகைகள் வைத்திருந்த பையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த உமா இதுகுறித்து கமுதி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.
நகை பறித்துச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இதற்கிடையே நகையை பறிகொடுத்த உமாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறினார். இதனால் உண்மையிலேயே நகையை மர்மநபர்கள் பறித்துச் சென்றார்களா? அல்லது உமா நகை பறிபோனதாக நாடகமாடுகிறாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #JewelRobbery

×

X